ALAN THILAK MARTIAL ARTS ACADEMY
SANTHANA KRISHANA THEATRE, PALANI.
தாய்-சி
மன அழுத்தத்தை குறைத்து, முதுமையினால் ஏற்படும் தடுமாற்றத்தை போக்கி என்றும் மூப்பை போக்கும் அற்புத கருவி. இன்று உலகின் பல்வேறு நாடுகளில் காலை மாலை வேளைகளில் பூங்காக்களில் ஆங்காங்கே மென்மையான அசைவுகளுடன் கூடிய ஒரு பயிற்சியினை பலரும் செய்யக் காணலாம். நகர் நிலை தியானம் என்று சொல்லப்படும் தாய்-சிதான் அது.
சீனாவின் பூர்வீக கலையான இது ராஜ வம்சத்துக்கும், குருமார்களுக்குமான கலையாகவே பல நூறு ஆண்டுகளாக இருந்துவந்தது. சுமார் 16ம் நூற்றாண்டுக்குப் பிறகே இது மக்களுக்கான கலையாக பரிணமித்தது. முறையான ஆசானிடம் பயிற்சி பெற்று தொடர் பயிற்சி மேற்கொண்டால் இந்தக்கலை மன அழுத்ததை போக்கி ஆரோக்கிய வாழ்வுக்கு வழி வகுக்கிறது. இப்பயிற்சியினை மேற்கொள்ள வயதோ உடற்குறைபாடோ ஒரு தடையல்ல. ஏனெனில் இது உடல்வலு சம்மந்தப்பட்டதல்ல. மாறாக உடலை காலப்போக்கில் இப்பயிற்சி வலுப்படுத்துகிறது.
No comments:
Post a Comment