SANTHANA KRISHANA THEATRE, PALANI.
தாய்-சி
மன அழுத்தத்தை குறைத்து, முதுமையினால் ஏற்படும் தடுமாற்றத்தை போக்கி என்றும் மூப்பை போக்கும் அற்புத கருவி. இன்று உலகின் பல்வேறு நாடுகளில் காலை மாலை வேளைகளில் பூங்காக்களில் ஆங்காங்கே மென்மையான அசைவுகளுடன் கூடிய ஒரு பயிற்சியினை பலரும் செய்யக் காணலாம். நகர் நிலை தியானம் என்று சொல்லப்படும் தாய்-சிதான் அது.
சீனாவின் பூர்வீக கலையான இது ராஜ வம்சத்துக்கும், குருமார்களுக்குமான கலையாகவே பல நூறு ஆண்டுகளாக இருந்துவந்தது. சுமார் 16ம் நூற்றாண்டுக்குப் பிறகே இது மக்களுக்கான கலையாக பரிணமித்தது. முறையான ஆசானிடம் பயிற்சி பெற்று தொடர் பயிற்சி மேற்கொண்டால் இந்தக்கலை மன அழுத்ததை போக்கி ஆரோக்கிய வாழ்வுக்கு வழி வகுக்கிறது. இப்பயிற்சியினை மேற்கொள்ள வயதோ உடற்குறைபாடோ ஒரு தடையல்ல. ஏனெனில் இது உடல்வலு சம்மந்தப்பட்டதல்ல. மாறாக உடலை காலப்போக்கில் இப்பயிற்சி வலுப்படுத்துகிறது.
மேலும் இந்தக்கலை
மனஅழுத்தம் போக்கவும், உடலின் நெகிழும் தன்மையை அதிகரிக்கவும், தசைகளின் வலிமையை பெருக்கவும், முதுமை மற்றும் மூட்டு வலியினால் ஏற்படும் தள்ளாமையை போக்கி நமது
ஸ்திரத்தன்மையை அதிகரிக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், உலகமெங்கும் பயிற்சி செய்யப்படுகிறது.
தாய்-சி மருத்துவ குணங்கள்.
தாய்-சி பயிற்சியின் போது நமது கவனம் முழுதும் இயங்குமுறையிலும், மூச்சுப்பயிற்சியிலும் ஒன்றித்து விடுகிறது. இதனால் கோபம், டென்சன், குற்றமனப்பான்மை எனப்படும் ஆங்சைட்டி ஆகியவற்றை போக்கி அமைதியான வாழ்வுக்கு நம்மை அழைத்துச்செல்கிறது. குறிப்பாக முதுமை அடைந்தவர்களுக்கு சிரமமில்லாதபடி தசைகளுக்கோ மூட்டுகளுக்கோ சிரமமே
இல்லாமல் பயிற்சி மேற்க்கொள்ளப்படுகிறது. சில மாதங்களுக்குள் ஆர்த்திரிடிஸ் எனப்படும் மூட்டுவாத நோய் உள்ளவர்கள் கூட ஊன்றுகோலை தூக்கி எறிந்துவிடும் அளவிற்கு வலிமையை ஏற்ப்படுத்துகிறது.
மேலும்,
- குற்றமனப்பாண்மையையும் மனக்குறை நோயையும் தீவிரத்தன்மையை குறைக்கிறது.
- உடல் இயக்க ஒருங்கினைப்பை ஏற்ப்படுத்தி நிலை தடுமாற்றத்தை அகற்றி தவறி
- விழுவதிலிருந்து நம்மை காக்கிறது.
- நிம்மதியான மற்றும் ஆழ்ந்த உறக்கத்திற்கான அரு மருந்தாகவும் திகழ்கிறது.
- மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படும் எலும்பு பலவீனத்தைப்போக்குகிறது.
- இரத்த அழுத்ததை கட்டுப்படுத்துகிறது.
- இருதயமண்டலத்தை வழுப்படுத்துகிறது,
- க்ரோனிக் பெயின் எனப்படும் வலியைப்போக்குகிறது,
- உடல் வலு கூட்டி இயல்பு வாழ்க்கையை மேம்படுத்துகிறது..
மிக குறைவான நேரமே பொதுமென்கிற பயிற்சி ஆனால் அன்றாட பயிற்சி சிறிது நேரமே..
பெரு நகரங்களில் கூட அரிதான இப்பயிற்சி தற்போது பழனியில். மதுரை குருஜி
திரு ராஜசேகரன் அவர்கள் வழிகாட்டுதலோடு மதுரை மாஸ்டர் திரு இராமன்
அவர்களால் பழனி சந்தான கிருஸ்ணா திரையரங்கில் சனி மற்றும் ஞாயிறு காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.
அனைவரும் வருக! பயன் பெற்றுச்செல்க!
No comments:
Post a Comment